தமிழகம்

கேஎம்சி மருத்துவமனையில் மாணவர்கள் மோதல்

செய்திப்பிரிவு

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவர்களிடையே நிகழ்ந்த மோதலில் 7 மாணவர்கள் காயமடைந்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (5-ம் தேதி) மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக 4-ம் ஆண்டு மாணவர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இது தொடர்பாக இரு தரப்பு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 7 மாணவர்கள் காயமடைந்தனர். 4-ம் ஆண்டு மாணவர் ஜீவானந்தம் பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த மாணவர்கள் அனைவரும் மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சைப் பெற்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் டீன் டாக்டர் நாராயணபாபு மாண வர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இனி மேல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மாண வர்களின் மோதலால் இன்று நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள் ளது. மாணவர்களின் மோதல் காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பரபரப்பாக காணப்படுகிறது.

SCROLL FOR NEXT