பருவநிலை மாற்றம் தொடர் பான சிறப்பு கருத்தரங்குக்கு ‘தி இந்து’ மையம் ஏற்பாடு செய்து ள்ளது. இக்கருத்தரங்கு சென்னை மியூசிக் அகாடமியில் வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளது.
‘பருவநிலை மாற்றம்: இதழியல் தோல்வியுற்றதா?’ என்ற தலைப்பில் ஒருநாள் கருத் தரங்குக்கு ‘தி இந்து’ மையம் ஏற்பாடு செய்துள்ளது. ராயப் பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் வரும் 14-ம் தேதி மாலை 6.30 மணிக்கு இந்த கருத் தரங்கு நடைபெறுகிறது.
இதில், இங்கிலாந்தின் பிரபல ஆங்கில இதழான ‘தி கார்டியன்’ இதழின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஆலன் ரஸ்பிரிட்ஜ் சிறப்புரையாற்றுகிறார்.
கருத்தரங்குக்கு முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமை வகிக்கவுள்ளார்.
இந்த கருத்தரங்கில் பொது மக்கள் அனைவரும் பங்கேற் கலாம். அதற்காக பதிவு செய்ய 044-28524445 என்ற தொலைபேசி எண்ணை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் thc@thehinducentre.com என்ற மின்னஞ்சல் முகவரி யையும் தொடர்பு கொள் ளலாம்.