காவல்துறை கூடுதல் டிஜிபி சஞ்சய் அரோரா உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக உள்துறை செயலர் அபூர்வ வர்மா வெளி யிட்ட அறிவிப்பு:
கூடுதல் டிஜிபி சஞ்சய் அரோரா, இயக்கப் பிரிவில் இருந்து நிர் வாகப் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த சஞ்சீவ் குமார், தலைமையிடத்து கூடுதல் டிஜிபியாக நியமிக்கப் பட்டுள்ளார்.
அதேபோல, தலைமையிடத்து கூடுதல் டிஜிபியாக இருந்த ஸ்ரீலட்சுமி பிரசாத், ரயில்வே கூடுதல் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆயுதப்படை கூடுதல் டிஜிபி தமிழ்ச்செல்வன், அடுத்த உத்தரவு வரும் வரை இயக்கப் பிரிவு கூடுதல் டிஜிபி பணியையும் கூடுதலாக கவனிப்பார்.