சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் உட்பட 17 பேரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன், 1991-ம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி முதல் 1996-ம் ஆண்டு மே 13-ம் தேதி வரை தமிழக பொதுப்பணித்துறை அமைச்ச ராக இருந்த காலத்தில், வருமானத் துக்கு அதிகமாக சொத்து குவித்த தாக புகார் எழுந்தது. அதையடுத்து ரூ.11 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 252 மதிப்புள்ள கட்டிடம், நிலம், வாகனம் உள்ளிட்ட சொத்துகளை ராஜகண்ணப்பன் தனது பெயரிலும், மனைவி, தாய் மற்றும் உறவினர்கள் பெயரிலும் வாங்கியதாக 1996-ம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கில், ராஜகண்ணப் பன், அவரது மனைவி நளா யினி, தாய் ராஜலட்சுமி, தம்பி செந்தாமரை, மற்றொரு தம்பி திருவழகு, உறவினர் கள் செல்லம்மாள், கண்ணகி, கலை ராஜன், கண்ணாத்தாள், தவமணி, ஜெயபாரதி, தேவகியம்மாள், பாலசுப்பிரமணியன், கணபதி, சுலோனா, கலைமதி, லட்சுமணன், மாணிக்கம், பெருமாள், சரஸ்வதி ஆகிய 20 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்றது. இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2005-ம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதன் நகல், குற்றம்சாட்டப்பட்ட அனை வருக்கும் வழங்கப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட நளாயினி, ராஜலட்சுமி ஆகியோர் ஏற் கெனவே இறந்துவிட்டனர். குற்றம் சுமத்தப்பட்ட பால சுப்பிரமணியன் அண்மையில் உயிரிழந்தார். அதனால் அவர் கள் மீதான குற்றச்சாட்டு விலக்கிக்கொள்ளப்பட்டது. மீதமுள்ள 17 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோபால், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்பதால், அனைவரையும் விடுவிக்கிறேன் என்று நேற்று தீர்ப்பளித்தார்.