மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி, கலாம் பெயரில் அவரது சொந்த ஊரில் அறிவியல் பல்கலைக் கழகம் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, “மக்கள் ஜனாதிபதி என்று அன்புடன் அழைக்கப்படுபவர் கலாம். இதன் மூலம் சாமானிய மக்கள் மீதான அவரது அன்பும் அக்கறையும் வெளிப்படுகிறது. மத்திய அரசு கலாம் பிறந்த மண்ணில் அவரது பெயரில் அறிவியில் பல்கலைக் கழகம் ஒன்றைத் திறப்பதே அவருக்கு செய்யும் சிறந்த அஞ்சலி.
நாடு மண்ணின் மைந்தனை இழந்து விட்டது, பிரிவினையின்றி அனைத்து தரப்பு மக்களையும் கலாம் கவர்ந்துள்ளார்” என்று தெரிவித்தார்.