தமிழகம்

எங்க ஊர்க்காரர் எம்.எஸ்.வி: பிரகாஷ் காரத் நினைவஞ்சலி

எம்.மணிகண்டன்

மறைந்த இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனும், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிரகாஷ் காரத்தும் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள எலப்புள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவு குறித்து பிரகாஷ் காரத் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் எனக்கும் ஒரே கிராமம். அவர் என்னை விட மூத்தவர். எம்.எஸ்.வி. யின் தந்தையார் இளம் வயதிலேயே மரணமடைந்தார். இதனால் அவர்களின் குடும்பம் கடும் நெருக்கடிகளை சந்தித்தது. ஏழ்மையின் பிடியில் இருந்த எம்.எஸ்.வி ஒரு கட்டத்தில் வீட்டை விட்டே வெளியேறிவிட்டார்.

பிறகு நாங்களும் சென்னைக்கு குடி பெயர்ந்துவிட்டோம். எம்.எஸ்.வி-யின் குடும்ப மும் சென்னையில் வசித்ததால், எனது அம்மா அவரது தோழியான எம்.எஸ்.வி.யின் தாயாரை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு செல்வார். அப்போது எனக்கு 12 வயதிருக்கும். எம்.எஸ்.வி எப்போதும் சுறுசுறுப்பாக இசைக்கருவிகளுடன் இயங்கிக் கொண்டிருப்பார்.

அந்த சூழலில் எங்கு பார்த்தாலும் விஸ்வ நாதன்-ராமமூர்த்தி பாடல் ஹிட் ஆகிக்கொண்டி ருந்தது. அது 1960-கள் என்று நினைக்கிறேன். அப்போது எனது அம்மா எம்.எஸ்.வி-யை பற்றி பெருமையாக பேசுவார். எங்கள் இரண்டு குடும்பத்தின் நட்பு இன்றும் தொடர்கிறது. அவருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படவில்லை என்று பலர் குறைபடுகிறார்கள். அவரின் இசையை விருதின் மூலம்தான் அங்கீகரிக்க வேண்டும் என்றில்லை. மக்கள் அவரை அங்கீகரித்துவிட்டனர் என்றார்.

SCROLL FOR NEXT