தமிழகம்

ஆசிய தடகளப் போட்டியில் கோவை மாணவர்கள் சாதனை

செய்திப்பிரிவு

சீனாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான தடகளப் போட்டியில், கோவையைச் சேர்ந்த மாணவரும், மாணவியும் சாதனை படைத்து நாடு திரும்பியுள்ளனர்.

ஆசிய அளவிலான இரண்டாவது தடகளப் போட்டிகள் சீனாவில் கடந்த மாதம் நடைபெற்றன. அதில், கோவையிலிருந்து சித்தாபுதூரில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவரான விவேகானந்தன் என்பவரும், சி.ஆர்.ஆ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி என்பவரும் பங்கேற்றனர்.

இதில் விவேகானந்தன், உயரம் தாண்டுதல் பிரிவில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மும்முறை தாண்டுதலில், நந்தினி 3-வது இடம் பிடித்தார்.

இருவரும் விமானம் மூலம் நேற்று முன்தினம் கோவை திரும்பினர். மாணவர் விவேகானந்தனுக்கு கோவை பன்னாட்டு விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம், விமான நிலைய ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) அனந்தலட்சுமி வாழ்த்து தெரிவித்தார்.

SCROLL FOR NEXT