தமிழகம்

சரத்குமார் பிறந்த நாள்: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

செய்திப்பிரிவு

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

ஜுலை 14-ம் தேதி 61-வது பிறந்த நாள் கொண்டாடும் உங்களுக்கு எனது நல்வாழ்த்துகள். திரைத்துறை யில் தனக்கென தனி முத்திரை பதித்து வருவதோடு, அரசியல் மற்றும் பொது வாழ்விலும் சிறந்து பணியாற்றிவரும் நீங்கள் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

பிறந்தநாளையொட்டி சரத் குமார் கூறும்போது, ‘‘முதல்வர் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து அனுப்பியிருப்பது மகிழ்ச்சி அளிக் கிறது. அவருக்கு எனது நன்றி! உலகளாவிய சகோதரத்துவம் தழைக்கவும், சமூக சமதர்மம் உருவாகவும் நாம் எல்லோரும் பாடுபட வேண்டும் என்பதுவே என் பிறந்த நாள் செய்தி’’ என்றார்.

SCROLL FOR NEXT