தமிழகம்

முதல்வர் வீட்டுக்கு வந்த அமைச்சர்கள்: அதிமுக மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு

செய்திப்பிரிவு

முதல்வரின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு அமைச்சர்கள் ஒவ் வொருவராக வந்து சென்றதால் நேற்று மாலை பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை தலைமைச் செயலகத்துக்கு வந்து உதவிப் பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதுடன், பல்வேறு திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்துவிட்டு மீண்டும் போயஸ் கார்டன் திரும்பினார்.

இந்நிலையில், நேற்று மாலைமுதல், அமைச்சர்கள் ஒவ்வொருவராக முதல்வரின் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்து சென்றனர். இறுதியாக, மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங் கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனி யப்பன் ஆகியோர் வந்து முதல் வரின் செயலர்களுடன் ஆலோ சனை நடத்திவிட்டு சென்றனர்.

இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் கூறப்படுவதாவது: கடந்த ஏப்ரல் மாதம் மாவட்டம், ஒன்றியம், வட்டம் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு நிலைகளுக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் இன்னும் வெளியாக வில்லை.

மாவட்ட வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக் கப்பட்ட அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டி யலை வழங்கியுள்ளதாக கூறப் படுகிறது. அடுத்த சில தினங்களில் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். செயல்படாத மாவட்ட செயலாளர்கள் சிலர் மாற்றப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்படலாம் என்று அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது

SCROLL FOR NEXT