சென்னையில் மீட்கப்பட்ட ஆம்பூரைச் சேர்ந்த பவித்ரா, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏற்கெனவே தங்கியிருந்த விடுதியிலேயே 23-ம் தேதி வரை தங்கியிருக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், பவித்ரா காணாமல் போனதில் இருந்து இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அருகேயுள்ள குச்சி பாளையத்தைச் சேர்ந்தவர் பழனி (37), இவரது மனைவி பவித்ரா (23). இவர்களுக்கு ரிஷிதா (5) என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த மாதம் 24-ம் தேதி திடீரென பவித்ரா காணாமல் போனார். இது குறித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பழனி புகார் கொடுத் தார். இது தொடர்பாக ஷமீல் அஹ்மது (27) என்பவரை போலீஸார் அழைத்து விசாரித்தனர். பின்னர், மருத்துவமனையில் ஷகீல் உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதில் அவர் இறந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆம்பூரில் கலவரம் மூண்டது. இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப் பட்டது.
இதற்கிடையே, தனது மனைவியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை பழனி தாக்கல் செய்தார். இதனால், தனிப் படை அமைத்து பவித்ராவை போலீ ஸார் தேடினர். அம்பத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பவித்ராவை மீட்டனர்.
இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு பவித்ரா நேற்று ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் நடந்த விசாரணை வருமாறு:
நீதிபதிகள்: நீ தான் பவித்ராவா?
பவித்ரா: ஆமாம், நான்தான் பவித்ரா.
நீதிபதிகள்: நீ யாருடன் செல்ல விரும்புகிறாய். பெற்றோருடனா அல்லது கணவருடனா?
பவித்ரா: பெற்றோருடன் செல்ல விரும்புகிறேன். ஆனால், எனக்கு விவாகரத்து வேண்டும்.
நீதிபதிகள்: இந்த மாதிரியெல் லாம் பதில் சொல்லக்கூடாது. உன் இஷ்டத்துக்கு உத்தரவு போட முடியாது. கேட்டவுடன் வாங்கிக் கொடுப்பதற்கு விவாகரத்து ஒன் றும் கடையில் விற்கும் பொருளல்ல. விவாகரத்து பெறுவதற்கு தனி நீதிமன்றம் உள்ளது. அங்கேதான் முறையிட வேண்டும்.
(இவ்வாறு கூறிய நீதிபதிகள், ‘‘இது வாழ்க்கைப் பிரச்சினை என்பதால், உங்கள் பெண்ணை அழைத்துச் சென்று புத்திமதி சொல்லுங்கள் என்று அவரது பெற்றோருக்கு அறிவுறுத்தினர்.)
நீதிபதிகள்: உனக்கு ஷமீல் அஹ்மதுவை தெரியுமா?
பவித்ரா: தெரியும். நாங்கள் இருவரும் ஒரே கம்பெனியில் ஒன்றாக வேலை பார்த்தோம்.
சென்னை உயர் நீதிமன்ற வழக் கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் (குறுக் கிட்டு): இது முக்கியமான வழக்கு என்பதால் இங்கே நாங்கள் எல்லாம் கூடியிருக்கிறோம். ஆம்பூர் சம்ப வத்துக்கு இந்தப் பெண்தான் மூல காரணம். அங்கு நடந்த வன்முறை யில் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏராள மானோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
திருமணமான ஒரு பெண், திருமணமான ஆணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சென்றுவிட் டால், அந்த வழக்கை எப்படி கையாள வேண்டும்? என்று போலீஸாருக்கு இந்த நீதிமன்றம் வழிகாட்டுதல்களை உருவாக்கித் தரவேண்டும். அது ஒரு முன்உதாரணமாக இருக்கும்.
நீதிபதிகள்: ஆம்பூரில் நடந்த சம்பவத்துக்கு நாங்களும் வருந்து கிறோம். பவித்ரா மேஜரான பெண். அவரை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. அவர் பெற்றோருடன் செல்ல விரும்புகிறார்.
ஆர்.சி.பால்கனகராஜ்: ஆம்பூரில் இப்போது சுமுகமான சூழல் இல்லை. இந்நிலையில், பவித்ராவை அங்கு அனுப்பி னால் அவருக்கு பாதுகாப்பாக இருக்காது. இதை கருத்தில் கொண்டு தாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த நீதி மன்றத்தில் பவித்ரா ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அவரது கணவர் பழனி, தனது பெண் குழந்தை யுடன் ஆஜராகியுள்ளார். பவித்ரா வின் பெற்றோரும் வந்திருக் கிறார்கள். ஒரு கடையில் வேலை பார்த்ததாகவும், அம்பத்தூரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி யிருந்ததாகவும் பவித்ரா கூறியுள் ளார். அவர் தனது பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் தெரி வித்துள்ளார்.
இவ்வழக்கில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் ஏ.என்.தம்பிதுரை மற்றும் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளை மனதில் கொண்டும், வழக்கில் முக்கியப் பிரச்சினைகள் இருப்பதாலும் விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு தள்ளிவைக் கிறோம். அதுவரை பவித்ரா ஏற் கெனவே தங்கியிருந்த விடுதியி லேயே சொந்த செலவில் தங்கி யிருக்க வேண்டும். அவருக்கு காவல்துறையினர் உரிய பாது காப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.