தமிழகம்

பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு கண்காட்சி: சென்னையில் தொடக்கம்

செய்திப்பிரிவு

பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு கண் காட்சி சென்னையில் நேற்று தொடங் கியது.

யுபிஎம் இந்தியா நிறுவனம் மற்றும் எலெக்ட்ரானிக் செக்யூரிட்டி அசோசியேன் ஆஃப் இந்தியா (ஈசாய்) இணைந்து பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு கண்காட்சி 2015 -க்கு ஏற்பாடு செய்துள்ளது. நந்தம்பாக்கம் வரத்தக மையத்தில் நடைபெறும் இக்கண்காட்சியை ‘ஈசாய்’ அமைப்பின் தலைவர் ஆர். நந்தகுமார் நேற்று தொடங்கி வைத்தார்.

மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், சர்வதேச அளவில் தீ விபத்துக்களை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தீ தடுப்புக் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், தென்னிந்தியாவில் உள்ள பாதுகாப்பு மற்றும் தீ தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைப்பதோடு, சந்தை வாய்ப்புகளை முதலீடாக மாற்றுவதற்கும் இக்கண்காட்சி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.

‘‘இந்தியாவில் உள்ள தீ தடுப்பு பாதுகாப்புச் சந்தை வரும் 2019-ல் ரூ.23 ஆயிரம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 25 சதவீதத்துக்கும் அதிகமான பொதுத் துறை நிறுவனங்கள் தங்கள் பதிவு அலுவலகங்களைத் தமிழகத்தில் அமைத்துள்ளன.

தொழில் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் எளிதாக அணுகுவதற்கு வசதியாக இக்கண் காட்சி சென்னையில் நடத்தப்படுகிறது’’ என்று யுபிஎம் இந்தியாவின் செயல்நிலை மேலாண்மை இயக்குநர் யோகே முத்ராஸ் கூறினார்.

SCROLL FOR NEXT