தமிழகம்

எஸ்.ஐ தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு

செய்திப்பிரிவு

காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

தமிழக காவல் துறையில் காலியாக இருக்கும் 1,078 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விண்ணப்பித்த அனைவரும் எழுத்து தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். கடந்த மே மாதம் 23, 24-ம் தேதிகளில் இதற்கான எழுத்து தேர்வு நடந்தது.

இந்நிலையில் தேர்வு முடிவு கள் www.tnusrbexams.net என்ற இணையதளத்தில் நேற்று வெளி யிடப்பட்டன. கட்-ஆப் மதிப்பெண் மற்றும் அடுத்தக்கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட்டோர் விவரமும் அதில் வெளியிடப்பட்டுள்ளன.

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 3 மற்றும் 5-ம் தேதிகளில் உடல் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 15 இடங்களில் இந்த தேர்வு நடைபெறும். இதிலும் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

SCROLL FOR NEXT