சென்னையில் போராட்டம், தெருமுனைக் கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் எவை என்பதை சென்னை மாநகர காவல் ஆணையரக இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு சைதை சுரங்கப்பாதை அருகே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்க காவல்துறை யினருக்கு உத்தரவிடக் கோரி சைதாப்பேட்டை அரங்கநாதன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்திய நாராயணன் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கோரிய இடம், பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கப் பட்ட இடம் இல்லை, அங்கு தெருமுனைக்கூட்டம் மட்டுமே நடத்த அனுமதி உள்ளது. அத னால்தான் மனுதாரர் கோரிக்கை நிராகரிக்கப் பட்டது என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மனுதாரர் மனுவை நிராகரித்து காவல் ஆய்வாளர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனு தாரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் தேரடி அருகே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி இன்று (2-ம் தேதி) விண்ணப் பிக்கலாம். அதை உடனடி யாகப் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதை மனுதாரருக்கும் தெரிவிக்க வேண்டும்.
சென்னையில் எந் தெந்த இடங்களில் பொதுக் கூட்டம், எந்ததெந்த இடங்களில் தெருமுனைக் கூட்டங் கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையரக இணையதளத் தில் மாநகர காவல் ஆணையர் வெளியிட வேண்டும். இத னால், எதிர்காலத்தில் கூட்டம் நடத்த அனுமதி கோரு வோருக்கும், சட்டம், ஒழுங் கைப் பாதுகாக்கும் போலீஸா ருக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. இவ்வாறு உத்தர வில் கூறப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் கூட்டம் நடத்த அனுமதி கோருவோருக்கும், சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கும் போலீஸாருக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது.