திருச்சி கருமண்டபம் எரிவாயு தகன மேடை அருகே முழுமையாக எரிக்கப்படாமல் கிடந்தவை ஒரு உடலின் பாகங்கள் என்று கருதப் பட்ட நிலையில், அவை 2 சடலங் களின் பாகங்கள் என்பது பரி சோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தலை மறைவாக இருந்த எரிவாயு தகன மேடை ஊழியர்கள் 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கடந்த 15-ம் தேதி மூதாட்டியின் உடலை எரிக்காமலேயே, சாம் பலைக் கொடுத்ததால் ஆத்திர மடைந்த உறவினர்கள் கருமண் டபம் எரிவாயு தகன மயானத்தை சேதப்படுத்தினர். எரிவாயு தகன மேடை அருகே மூதாட்டியின் உடல் மட்டுமின்றி, முழுமையாக எரிக்கப்படாமல் இருந்த உடல் பாகங்களும் கிடந்ததால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையில், ஏற்கெனவே அங்கு தனது தந்தையை தகனம் செய்து, அஸ்தியை வாங்காமல் சென்ற சதீஷ், தனது தந்தையின் அஸ்திதான் என்பதை டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த வேண்டும் எனக் கோரி கடந்த 17-ம் தேதி எரிவாயு தகன மயானம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஒன்றல்ல; இரண்டு..
திருச்சி அரசு மருத்துவக் கல் லூரி உடற்கூறுவியல் மருத்துவர் செல்வக்குமார், மயானத்தில் எரிக்கப்படாமல் கிடந்த உடல் பாகங்களை நேற்றுமுன்தினம் பரிசோதனை செய்தார். அங்கிருந் தவை ஒரு உடலின் பாகங்கள் என்று கருதப்பட்ட நிலையில், அவை இரு உடல்களின் பாகங்கள் என்பது பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, உடல்களின் பாகங்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. பரி சோதனை முடிவுக்குப் பிறகே, அது யாருடைய உடல்கள் என்பது தெரியவரும்.
2 பேர் கைது
இப்பிரச்சினையில் தலைமறை வாக இருந்த எரிவாயு தகன மேடை ஊழியர்கள் குமார் மற்றும் ராணி ஆகியோரை தனிப்படை போலீஸார் திருச்சி அருகேயுள்ள இனாம்குளத்தூரில் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகே, இந்த விவ காரத்தில் மறைந்துள்ள உண்மை கள் வெளிச்சத்துக்கு வரும் என்று தெரிகிறது.
மயானம் சீரமைப்பு
“பொதுமக்களால் சேதப்படுத் தப்பட்ட மயானத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் 27-ம் தேதி மயானம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும். தற்போதைய நிலையில், மயானத்தை சில மாதங்களுக்கு மாநகராட்சியே நிர்வகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார் மாநகராட்சி உதவி ஆணையர் (பொறுப்பு) கண்ணன்.