தமிழகம்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோகுல்ராஜ் உடல் அடக்கம்: பேருந்து கண்ணாடிகள் உடைப்பு; 5 மாவட்ட போலீஸ் குவிப்பு

செய்திப்பிரிவு

கடத்தி கொலை செய்யப்பட்ட சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் உடல் நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட் டது. பலத்த போலீஸ் பாதுகாப் புடன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று உடல் அடக்கம் செய் யப்பட்டது.

தனிப்படை போலீஸார் நடத் திய தீவிர விசாரணையில், கோகுல்ராஜ் தற்கொலை செய்து கொள்ளவில்லை, சிலரால் கடத்திக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், கடந்த 23-ம் தேதி திருச்செங்கோடு மலைக்கோயிலுக்கு சக வகுப்பு தோழியுடன் சென்றபோது, ஒரு கும்பல் அவரைக் கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் காதல் ஜோடிகள் சுற்றி திரிந்தால், அவர் களின் சமூகம் குறித்து யுவராஜ் விசாரிப்பதும், வெவ்வேறு சமூ கத்தைச் சேர்ந்தவர்கள் காதலித் தால், அவர்களை எச்சரித்து மிரட் டுவதை வழக்கமாகவும் கொண் டுள்ளார் என்பது தெரியவந்தது.

கடந்த 23-ம் தேதி கோயி லுக்கு தோழியுடன் சென்ற கோகுல்ராஜிடம், சமூகம் குறித்து விசாரித்த யுவராஜ் உள்ளிட்ட கும்பல், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என அறிந்து, மாணவரை மட்டும் காரில் கடத்திச் சென்று கொலை செய்தது தெரியவந்தது.

இந்த சம்பவத்தையடுத்து நேற்று முன் தினம் இரவு ஓமலூர் பேருந்து நிலையத்தில் இருந்த இரண்டு அரசு டவுன் பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டது. தீவட்டிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இரண்டு டவுன் பேருந்து, மேச்சேரி அருகே அரங்கனூர் பகுதியில் சென்ற அரசு பேருந்து மீது கல் வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது.

கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்த நிலையில், உறவினர்கள் நேற்று முன் தினம் மாலை உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டு, நேற்று உடலை வாங்க ஒப்புக் கொண்டனர். அசம்பாவிதங்களைத் தடுக்க, சேலம் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது

கோகுல்ராஜின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த விடுதலை சிறுத்தைகள் அமைப் பின் தலைவர் தொல்.திருமாவள வன் வந்திருத்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து அக் கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத் துவமனையில் திரண்டனர். பாதுகாப்பு நடவடிக்கையாக சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இருந்து 500 போலீஸார் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சேலம் அரசு மருத்துவமனை யில் இருந்து நேற்று மதியம் கோகுல்ராஜ் உடலை ஊர்வலமாக உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை அமைப்பினர் ஓமலூர் பெரமெச்சூர் இடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். வழியில் அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க ஊர்வலத்தின் முன்பும், பின்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நேற்று மாலை அவரது வீட்டின் முன்பு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டது. பின்னர் கோகுல்ராஜ் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT