சாலையில் எதிரே வரும் வாகனங் களின் விளக்கு வெளிச்சத்தால் ஏற்படும் விபத்துகளை தவிர்ப் பதற்காக சென்னையில் உள்ள சாலை தடுப்புகளின் உயரத்தை 1.3 மீட்டராக சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகரித்து வருகிறது.
சென்னையின் முக்கிய சாலை களில் இப்போது சாலை தடுப்புகள் இருக்கின்றன. இவை குறைந்த உயரமே உள்ளன. தடுப்புக்கு அந்தப் பக்கம் எதிர்திசையில் வரும் வாகனங்களின் விளக்கின் வெளிச்சம் வாகன ஓட்டிகளின் கண்களை கூச வைக்கும். இதனால், ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் முயற்சியாக, கான்கிரீட் சாலை தடுப்புகளை 1.3 மீட்டர் உயரத்துக்கு அமைத்து வருகிறது சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடை பெறுவதையொட்டி, சென்னையில் உள்ள 471 பேருந்து தட சாலைகளில் 194 சாலைகள் புதிதாக போடப்படுகின்றன. இந்த சாலை கள் அனைத்திலும் சாலை தடுப்பு களின் உயரம் அதிகரிக்கப்படும். சாலை போடும் பணிகள் முடிந்துள்ள சர்தார் பட்டேல் சாலை உள்ளிட்ட சாலைகளில் புதிய சாலை தடுப்புகள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைத் துறையின் கீழ் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் அண்ணாசாலையிலும் சாலை தடுப்பு களை உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது.
சாலை தடுப்பின் மீது வாகன ஓட்டிகள் மோதி விபத்துக் குள்ளாவதை தடுப்பது, எதிரில் வரும் வாகனங்களின் ஒளி வெளிச்சத்தால் பாதிக்கப்படாமல் இருப்பது, தடுப்புகள் மீது ஏறி குதிக்கும் பாதசாரிகளை தடுப்பது, தடுப்புகள் மீது இரவு நேரங்களில் மக்கள் படுத்துக் கொள்வதை தடுப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக சாலை தடுப்புகளின் உயரம் அதிகரிக்கப்படுகிறது.
இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “செப்டம்பர் மாதத்துக்குள் 194 பேருந்து தட சாலைகளிலும் புதிய தடுப்புகள் அமைக்கப்படும். இந்த தடுப்புகளின் அகலம் 1 மீட்டராகவும் உயரம் 1.3 மீட்டராகவும் இருக்கும். ஏற்கெனவே உள்ள சாலை தடுப்புகளின் புல்தரைகள், செடி, கொடிகள் அகற்றப்பட்டு வருகின்றன”என்றார்.