தமிழகம்

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 9 பேர் குழு அறிவிப்பு

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2016-ம் ஆண்டு நடைபெற உள்ளது. சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான திமுகவின் அறிக்கையைத் தயாரிக்க 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

டி.ஆர். பாலு அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கனிமொழி எம்,பி, பேராசிரியர் அ.ராமசாமி, ஆர்.சண்முக சுந்தரம், சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, என்.ஆர்.இளங்கோ, டி.கே.எஸ்.இளங்கோவன், தங்கம் தென்னரசு ஆகியோர் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் உள்ளனர் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT