அருண்ராஜ்

 
தமிழகம்

தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் மருந்தகங்கள் திறந்திருக்கும்: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

இன்று மருந்து வணிகர்கள் வேலை நிறுத்தம்

செய்திப்பிரிவு

சென்னை: ஆன்லைன் மருந்து விற்பனையைக் கண்டித்து மருந்து வணி​கர்​கள் வேலைநிறுத்​தப்போராட்​டம் இன்று நடை​பெறவுள்ள நிலை​யில், தமிழகம் முழு​வதும் 5 ஆயிரம் மருந்​தகங்​கள் திறந்​திருக்​கும் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜ் தெரி​வித்​தார்.

இது தொடர்​பாக செய்​தி​யாளர்​களிடம் தமிழக சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜ் கூறிய​தாவது: தமிழகம் முழு​வதும் 50 ஆயிரம் மருந்​தகங்​கள் உள்​ளன.

மருத்​து​வ​மனை​களு​டன் இணைந்த மருந்​தகங்​கள், அப்​போலோ, மெட்​பிளஸ், துளசி பார்​மசி, முத்து பார்​மசிபோன்ற சங்​கிலி தொடர் மருந்​தகங்​கள், முதல்​வர் மருந்​தகம், தமிழ்​நாடு கூட்​டுறவு சங்க மருந்​தகங்​கள், பிரதம மந்​திரி ஜன் ஔஷதி கேந்​திரா போன்ற அரசு ஆதரவு சில்​லறை விற்​பனை நிலை​யங்​கள் கடையடைப்​பில் பங்​கேற்​க​வில்​லை. எனவே, சுமார் 5 ஆயிரம் மருந்​தகங்​கள் திறந்​திருக்​கும்.

மருந்​துகளின் போது​மான, தடையற்ற விநி​யோகத்தை உறுதி செய்ய, மருந்​துகள் கட்​டுப்​பாட்​டுத்​துறை​யால் மாவட்ட வாரி​யாக உதவி எண்​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. தமிழ்​நாடு மருந்து வணி​கர் சங்​க​மும் அவசர காலங்​களில் மருந்​துகளை வழங்க மாவட்ட வாரி​யாக உதவி எண்​களை அறி​வித்​துள்​ளன. அந்த உதவி எண்​களை பொது​மக்​கள் தொடர்பு கொண்​டால், அத்​தி​யா​வசிய மருந்​துகள் உடனடி​யாக கிடைக்க வழி​வகை செய்​யப்​படும்.

https://www.drugscontrol.tn.gov.in/pdfs/4748_One_Day_Nationwide_Banth_instructions.pdf என்ற மாநில மருந்து கட்​டுப்​பாட்டு இணை​யதளத்​தில் உதவி எண்​கள் இடம்​பெற்​றுள்​ளன. ஆன்​லைனில் மருந்து விற்​பனை பிரச்சினை மத்​திய அரசு சம்​பந்​தப்​பட்​டது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT