சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஊழியர்கள், ஆசிரியர்கள் என 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பணி ஓய்வு வயது 60 ஆக உள்ளது.
வழக்கமாக ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். அந்த வகையில், கடந்த 2025 ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி 8,144 பேர் ஓய்வு பெற்றதாக தகவல் வெளியானது. அதேபோல், இந்தாண்டு நேற்று ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் வரை ஓய்வு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்தவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 5 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது.