தமிழகம்

மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 1000 ஏசி மின் பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு: முதல்வர் விஜய் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: ​மாநகர போக்குவரத்து கழகத்​துக்கு 1,000 ஏசி மின் பேருந்​துகள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்​கீடு செய்து முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை மாநகரில் சுற்​றுச்​சூழலுக்கு உகந்த, பாது​காப்​பான மற்​றும் வசதி​யான பொதுப் போக்​கு​வரத்து சேவையை வழங்​கும் வகை​யில், மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில் 1,000 புதிய குளிர்​சாதன வசதி கொண்ட மின்​சா​ரப் பேருந்​துகள்

கொள்​முதல் செய்​திட​வும், இந்​த பேருந்​துகளுக்கு தேவை​யான உட்​கட்​டமைப்பு வசதி​களை பணிமனை​களில் ஏற்​படுத்​த​வும் ரூ.500 கோடி நிதி ஒதுக்​கீடு செய்து முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதன் மூலம் சென்​னை​யின் பொதுப் போக்​கு​வரத்து சேவை நவீனமய​மாக்​கப்​படு​வதுடன், சுற்​றுச்​சூழல் மாசு குறைக்​கப்​பட்​டு, பயணி​களுக்கு மேம்​பட்ட மற்​றும் வசதி​யான போக்​கு​வரத்து சேவை கிடைக்​கும்.

மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில் சென்​னை​யில் தற்​போது 755 மின்​சா​ரப் பேருந்​துகள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன. இவற்​றில் 355 பேருந்​துகள் குளிர்​சாதன வசதி கொண்​டவை ஆகும்.

ரூ.17.99 கோடி விடுவிக்க ஒப்​புதல்

அரசுப் பேருந்​துகளில் பயணம் செய்​யும் பொது​மக்​களின் பாது​காப்பை மேலும் வலுப்​படுத்​த​வும், இயக்​கத்தை நிகழ்​நேரத்​தில் கண்​காணிக்​க​வும், ரூ.17.99 கோடி மதிப்​பீட்​டில் வாகன இருப்​பிடக் கண்​காணிப்​புக் கருவி​கள் மற்​றும் அவசர உதவி பொத்​தான்​கள் பொருத்​தப்​படும் என சட்​டப்​பேர​வை​யில் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் ஆ.விஜய் தமிழன் பார்த்​திபன் கடந்த செப். 8-ம் தேதி அறி​வித்​தார்.

இதன்​படி, எட்டு போக்​கு​வரத்​துக் கழகங்​களின் 13,490 வாக​னங்​களில் இருப்​பிடக் கண்​காணிப்​புக் கருவி​களும், 13,776 அவசர உதவி பொத்​தான் தொகுப்​பு​களும் பொருத்த ஏது​வாக முதல்​வர் விஜய், போக்​கு​வரத்​து கழங்​களுக்கு ரூ.17.99 கோடி விடுவிக்க ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளார்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT