சென்னை: “சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு கூட்டத் தொடரிலேயே ஐம்பது உரைகள் தமிழிலே நிகழ்த்தப்பட்டது இந்த குளிர்கால கூட்டத்தொடரில் தான்” என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தி, ஆங்கிலம் அல்லாத மொழியில் அதிகமாக உரை நிகழ்த்தியது இந்த கூட்டத் தொடரில் தான். அதில் அதிகமாக உரை நிகழ்த்தப்பட்ட மொழி தமிழ்.
சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு கூட்டத் தொடரிலேயே ஐம்பது உரைகள் தமிழிலே நிகழ்த்தப்பட்டது இந்த குளிர்கால கூட்டத் தொடரில்தான்.
இதுதான் இந்தி திணிப்புக்கும், சமஸ்கிருத திணிப்புக்கும் தமிழ்நாடு ஆற்றும் எதிர்வினை” எனத் தெரிவித்துள்ளார்.
அந்த எக்ஸ் பதிவில் சு.வெங்கடேசன் பேசும் காணொலியில், “இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 80-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆங்கிலம், இந்தி அல்லாமல் தங்கள் தாய்மொழியில் பேசியுள்ளனர். அதில் 50 தமிழ் உரைகள் இடம்பெற்றன” எனத் தெரிவித்துள்ளார்.