கோப்புப் படம்

 
தமிழகம்

​மார்க்சிஸ்ட்டுக்கு 5 தொகுதிதான்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

பரிசீலிப்போம் என்கிறார் பெ.சண்முகம்

செய்திப்பிரிவு

திமுக - மார்க்​சிஸ்ட் தொகு​திப் பங்​கீட்​டில் இழுபறி நீடிக்​கும் நிலை​யில், 5 தொகு​தி​களை பெற்​றுக்​கொள்​ளு​மாறு முதல்​வர் வைத்த வேண்​டு​கோளை பரிசீலிப்​போம் என மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் தெரி​வித்​துள்​ளார்.

திமுக கூட்​ட​ணி​யில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிக்கு 5 தொகு​தி​களை ஒதுக்க திமுக முன் வந்​துள்​ளது. மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலக்​குழு மற்​றும் செயற்​குழு கூட்​டம் நேற்று முன்​தினம் கூடியது. இரவு வரை நீடித்த இக்​கூட்​டத்​தில் திமுக​விடம் கடந்த முறை போட்​டி​யிட்ட 6 தொகு​தி​களை​யா​வது கேட்டு பெறு​வது என முடி​வெடுக்​கப்​பட்​டது. அதனடிப்​படை​யில் அண்ணா அறி​வால​யத்​தில் திமுக​வுட​னான 4-ம் கட்ட பேச்​சு​வார்த்​தைக்​கு, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் குழு நேற்று சென்​றது.

          

பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு எட்​டப்​படும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால் இந்த முறை​யும் உடன்​பாடு ஏற்​ப​டா​மல் பேச்​சு​வார்த்தை முடிவுற்​றது. பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் கூறிய​தாவது: கூட்​ட​ணி​யில் புதி​தாக கட்​சிகள் இணைந்​திருப்​ப​தால் தொகு​தி​களை ஒதுக்​கீடு செய்​வ​தில் இருக்​கக்​கூடிய சிரமங்​களை முதல்​வர் எங்​களிடத்​தில் பகிர்ந்​து​ கொண்​டார். அதனால் 5 தொகு​தி​களை ஏற்று ஒத்​துழைப்பு தரு​மாறு முதல்​வர் கேட்​டுக்​கொண்​டார். ஆனால் 6 தொகு​தி​களுக்கு தான் கட்​சி​யின் மாநிலக் குழு ஒப்​புதல் தரு​வதற்கு அனு​மதி அளித்​திருந்​தது.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி இந்த கூட்​ட​ணி​யில் நீடிக்க விரும்​பு​கிறோம். கடந்​த​முறை எங்​களது பலம் இருக்​கும் மாவட்​டங்​களில், எங்​களுக்​கான தொகு​தி​கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட​வில்​லை. அப்​படி கிடைத்​திருந்​தால் 6 தொகு​தி​களி​லும் வெற்​றி​பெற்​றிருப்​போம். எனவே, முதல்​வரின் வேண்​டு​கோளை கட்​சி​யின் மாநிலக் குழு கூட்​டத்தை கூட்டி பரிசீலித்து முடிவு செய்​வோம். எத்​தனை தொகு​தி​கள் கொடுப்​பார்​கள், அதற்​கேற்ப கூட்​ட​ணி​யில் நீடிப்​ப​தா? வேண்​டா​மா? என்​பதை பற்றி யோசிக்​கும் கட்சி மார்க்​சிஸ்ட் அல்ல.

மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யில் இருந்​து​தான் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை சந்​திப்​போம். உடன்​பாடு ஏற்​பட்ட பிறகு சென்னை உட்பட எங்​களுக்கு விருப்​ப​மான தொகு​தி​கள் அடங்​கிய விருப்​பப்​பட்​டியலை திமுக​விடம் வழங்​கு​வோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதையடுத்து, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செயற்​குழு கூட்​டம், தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலு​வல​கத்​தில் இன்று (மார்ச் 23) கூடும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதனடிப்​படை​யில் முடிவு செய்​யப்​பட்​டு, திமுக​வுட​னான பேச்​சு​வார்த்​தை​யில் மார்க்​சிஸ்ட் கட்​சிக்​கான தொகு​தி​கள் இன்று இறு​தி​செய்​யப்​படும்​ என கட்​சி தரப்​பில்​ தெரி​விக்​கப்​பட்​டுள்ளது.

SCROLL FOR NEXT