சென்னை: தமிழக உள்துறைச் செயலர் மணிவாசன் நேற்று பிறப்பித்த உத்தரவு:
திருச்சி ஆயுதப்படை டிஐஜி எம்.விஜயலட்சுமி, சென்னை ஊர்க்காவல் படை டிஐஜியாகவும், சிவகங்கை எஸ்.பி. சிவபிரசாத், தூத்துக்குடி எஸ்.பி.யாகவும், அங்கிருந்த எஸ்.பி. அபிஷேக்குப்தா, சிவகங்கை எஸ்.பி.யாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மத்திய மண்டல சிபிசிஐடி எஸ்.பி. சண்முகபிரியா, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கு சரக எஸ்.பி.யாகவும், ராமேசுவரம் கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பி.ஆர்.மீரா, சென்னை தலைமையிடத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.