தமிழகம்

நாடு முழுவதும் ரூ.1,786 கோடி செலவில் அனைத்து நீதிமன்றங்களிலும் டிஜிட்டல் நூலகம்: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா அறிவிப்பு

செய்திப்பிரிவு

நீதிமன்றங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின்கீழ் (இ-கோர்ட்), ரூ.1,786 கோடி செலவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்தார்.

பொதுநல வழக்கு குறித்த கொள்கை, நீதி, சுற்றுச்சூழல் சட்டங் களைப் பயன்படுத்துவது தொடர் பாக வழக்கறிஞர்கள் மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் இணைந்து நடத்திய இந்த மாநாட்டை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் டி.வி.சதானந்தா கவுடா தொடங்கிவைத்து பேசிய தாவது:

பொதுநல வழக்கு குறித்த கொள்கை ஏற்கெனவே தயாரிக்கப் பட்டு தயார்நிலையில் உள்ளது. விரைவில் இது நடைமுறைக்கு வரும். தேவையில்லாமல் பொதுநல வழக்குகள் தொடுக்கப்படுவதை தடுக்கும் வகையிலான அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

பணச்செலவு காரணமாக பெரும் பாலான ஏழை மக்களால் நீதி மன்றத்தை அணுக முடியவில்லை என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. வழக்குகளில் பெரிய வழக்கறிஞர்களை வாதாட வைப்பது என்பது மேல், நடுத்தர வர்க்கத்தினருக்கே சிரமமாக உள்ள நிலையில், ஏழை மக் களின் நிலை மிகவும் பரிதாபத்துக் குரியது. ஏழைகள் உட்பட அனைத்து தரப்பினரும் நீதிமன்றத்தை நாடும் வகையில் என்ன செய்யலாம் என்பது குறித்து வழக்கறிஞர்கள் சிந்திக்க வேண்டும்.

தற்போது நாடு முழுவதும் நீதிமன்றங்களில் சுமார் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகளுக்கு குறிப்பிட்ட காலத் துக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். வழக்குகளின் தேக்க நிலையை தவிர்க்க மாற்று தீர்வு முறைகளை (சமரசம், லோக் அதாலத், மத்தியஸ்தம்) ஊக்குவிக்க வேண் டும். இதன்மூலம், தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க முடியும்.

மத்திய சட்ட அமைச்சர் உயர் நீதிமன்றங்களை பார்வை யிடுவதுபோல் கீழ்நிலை நீதிமன்றங் களையும் பார்வையிட்டால் அங் குள்ள பிரச்சினைகள் மற்றும் தேவைகளை நேரடியாக அறிந்து கொள்ள முடியும் என்று இந்தக் கூட்டத்தில் எனக்கு யோசனை தெரிவித்தனர். அருமையான இந்த யோசனையை பின்பற்ற முடிவு செய்துள்ளேன்.

நீதிமன்றங்களை நவீனமயமாக் கும் இ-கோர்ட் திட்டத்தின் முத லாவது கட்டம் முடிவடைந்துள்ளது. இத்திட்டத்தின் 2-வது கட்டமாக ரூ.1,786 கோடி செலவில் நாடு முழுவதும் அனைத்து நீதி மன்றங்களிலும் ‘டிஜிட்டல் நூலகம்’ ஏற்படுத்தப்படும். இதன்மூலம் நீதித் துறை சம்பந்தப்பட்ட புத்தகங்கள், பல்வேறு வழக்குகளில் வழங் கப்பட்ட தீர்ப்பு நகல்களை பெற முடியும்.

இவ்வாறு அமைச்சர் சதானந்தா கவுடா கூறினார்.

பெயர் மாற்றம்

மாநாட்டை தொடக்கிவைத்து உரையாற்றிய அமைச்சர் சதானந்தா கவுடா, முதலில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பெயரை குறிப்பிட்டுவிட்டு தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளின் பெயரைக் குறிப்பிட்டார். “இப் போது மெட்ராஸ் ஐகோர்ட் என்று அழைக்கிறேன். விரைவில் சென்னை ஐகோர்ட் (சென்னை உயர் நீதிமன்றம்) என அழைக்கப்படும் என்று நம்புகிறேன். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

தமிழ் வழக்காடு மொழி?

மாநாட்டு தொடக்க விழா முடிந்ததும் நிருபர்களுக்கு சதானந்த கவுடா பேட்டி அளித்தார். அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி ஆக்கப்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த கவுடா, ‘‘உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உயர் நீதிமன்றத்தில் மாநில மொழியில் வழக்காடுகின்றனர். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் உயர் நீதிமன்றத்தில் மாநில மொழியிலும் வழக்காட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. ஆனால், இது சாத்தியமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. உயர் நீதிமன்றத்தில் மாநில மொழியில் வழக்காடுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT