தமிழகம்

தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து 50-க்கும் மேற்பட்ட மாணவர் காயம்

செய்திப்பிரிவு

பெரம்பலூரில் உள்ள தனியார் கல்விக் குழுமத்துக்கு சொந்த மான பள்ளிப் பேருந்து ஒன்று நேற்று காலை பேரளி, மருவத் தூர், கல்பாடி உள்ளிட்ட பகுதி களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பெரம்பலூருக்கு வந்து கொண்டிருந்தது.

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தை அடுத்த பாலக்கரை பகுதியில் பேருந்து வந்தபோது, திடீரென சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், காயமடைந்த மாணவ, மாணவிகளை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், போலீஸார், தீயணைப்பு மீட்புப் படையினர் பேருந்திலிருந்து போராடி மீட்டனர்.

காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட 31 பேரில், படுகாய மடைந்த அகரம் காந்த் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், க.எறையூர் சரளா, மருவத்தூர் பிரவீண் ராஜ் ஆகியோர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர் கள் 31 பேர் என காவல்துறையும் 37 பேர் என மாவட்ட நிர்வாகமும் தெரிவித்தன. எனினும், இந்த விபத் தில் 50-க்கும் மேற்பட்டோர் காய மடைந்திருக்கலாம் என விபத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

அதிக வேகத்தில் பேருந்தை இயக்கியது இந்த விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

பேருந்து ஓட்டுநரான ராஜாளி ராஜா(52) கைது செய்யப்பட்டார். விபத்து தொடர்பாக தனியார் கல்வி குழுமத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்(பொறுப்பு) ச.மீனாட்சி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT