தமிழகம்

சக மாணவர் தொலைத்த 300 ரூபாய்க்காக 8 மாணவர்களின் உள்ளங்கையில் சூடு வைத்த கொடூரம்: விடுதி ஊழியர் தற்காலிக பணிநீக்கம்

செய்திப்பிரிவு

விடுதியில் தங்கியிருந்த மாண வரின் 300 ரூபாயை காணவில்லை என்று கூறி 8 மாணவர்களின் உள்ளங்கையில் சூடு வைத்த விடுதி துப்புரவுப் பணியாளரை தற்காலிக பணிநீக்கம் செய்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அ.ஞானகேரன் உத்தர விட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது பள்ளி மாணவர்கள் நவீன் (16), பாரத்(15) ஆகியோர், தங்கள் வலது கையின் உள்ளங்கையில் ஏற்படுத்தப்பட்ட தீக்காயத்தை ஆட்சியர் அ.ஞானசேகரனிடம் காண்பித்து, அதற்கு காரணமான வர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். அவர்கள் 2 பேரிடமும் நடந்த சம்பவம் குறித்து ஆட்சியர் கேட்டறிந் தார்.

அதற்கு பதிலளித்த மாணவர் கள், “நாங்கள், சாத்தனூர் அரசுப் பள்ளி மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகிறோம். எங்களுடன் தங்கிய பிரகாஷ் என்ற மாணவர் வைத்திருந்த 300 ரூபாயை காணவில்லை என்று கூறி, துப்புரவுப் பணியில் உள்ள முருகன் என்பவர் கடந்த 25-ம் தேதி காலை விசாரித்தார். நாங்கள் தெரியாது என்றோம். அதற்கு அவர் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்ய சொன்னார். நாங்கள் மறுக்கவே, பணத்தை தொலைத்ததாக கூறும் மாணவரை தவிர்த்து மற்ற 8 மாணவர்களின் உள்ளங்கையில் தலா 2 தீக்குச்சியை ஏற்றி சூடு வைத்தார். வலி தாங்க முடியாமல் கத்தினோம். எங்களது கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. சாப்பிடகூட முடியவில்லை” என்றனர்.

மேலும், விடுதி காப்பாளர் வருகை குறித்து ஆட்சியர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இரு மாணவர்களும், “அவர் எப் போதாவது வருவார்” என்றனர். இதுகுறித்து மாணவர்களின் பெற் றோர் மனு அளித்தனர். இதைய டுத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் அலுவலருக்கு உத்தர விட்டார். அதன்படி, விசாரணை நடத்தி ஆட்சியருக்கு அறிக் கையை அதிகாரிகள் சமர்ப் பித்தனர்.

இதுகுறித்து ஆட்சியர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சாத்தனூர் அரசுப் பள்ளி மாண வர் விடுதியில் படித்துவரும் மாணவர்களுக்கு தீப்புண் காயம் ஏற்படுத்திய விடுதி துப்புர வுப் பணியாளர் முருகனை தற் காலிக பணிநீக்கம் செய்ததோடு, காப்பாளர் மீது ஒழுங்கு நட வடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் முருகன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவும் உத்தர விடப்பட்டுள்ளது” எனத் தெரி வித்துள்ளார்.

SCROLL FOR NEXT