தமிழகம்

கல்வியியல் பல்கலை. பி.எட். தேர்வு முடிவு வெளியீடு

செய்திப்பிரிவு

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் கடந்த மே, ஜூன் மாதங்களில் நடத்திய பிஎட் (பொது), பிஎட் (சிறப்பு கல்வி) தேர்வு முடிவுகள் நேற்று வெளி யிடப்பட்டன. தேர்வு முடிவுகளை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் இணைய தளத்தில் (www.tnteu.in) தெரிந்து கொள்ளலாம்.

மதிப்பெண் பட்டியல், தற்காலிக சான்றிதழ் ஜூலை 30-ம் தேதிக்கு பிறகு கல்லூரிகள் மூலம் வழங்கப்படும். மறுகூட்டல், மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் ஆகியவற்றுக்கு ஜூலை 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும்.

இதற்கான விண்ணப்ப படிவங் களை பல்கலைக்கழக இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று ஆசிரி யர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT