ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை குறித்து விசாரணை மற்றும் தனிப்படை அதிகாரிகளுடன் சிபிசிஐடி ஏடிஜிபி கரன்சின்ஹா நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோ தரரான ராமஜெயம் கடந்த 29.3.2012-ம் தேதி திருச்சி- கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பகுதியில் முட்புதரில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலை யாளிகள் குறித்து மாநகர போலீ ஸார் நடத்திய விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே, இவ்வழக்கு 2012 ஜூன் மாதம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட் டது. டிஎஸ்பி மலைச்சாமி தலைமை யிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இதையடுத்து இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிடக் கோரி ராமஜெயத்தின் மனைவி லதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையின்போது, குற்றவாளிகளைக் கண்டறிய சிபிசிஐடி போலீஸார் ஏற்கெனவே 3 முறை கால அவகாசம் கேட்டுப் பெற்றனர். அவை முடிந்து, கடந்த 24-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மேலும் 3 மாத காலம் அவகாசம் கேட்டுப் பெற்றனர். அப்போது சிபிசிஐடி போலீஸாருக்கு இதுதான் இறுதி காலக்கெடு எனவும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்த உத்தரவு வெளியாகி ஒருசில தினங்களே ஆனநிலையில் நேற்று, சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் ஏடிஜிபி கரன் சின்ஹா தலைமையில் சென் னையில் நடைபெற்றது. அதில், ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி மலைச்சாமி, தனிப்படையிலுள்ள இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர். இவர்களிடம் இவ்வழக்கில் ஏற் பட்டுள்ள முன்னேற்ற நிலை, விசாரணையின் அடுத்த நகர்வு களுக்கான திட்டங்கள் உள்ளிட் டவை குறித்து ஏடிஜிபி ஆலோ சனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, ராமஜெயத் தின் நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், சந்தேக நபர்கள் என சிலரை பட்டியலிட்டு அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான அனுமதிகேட்டு திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால், சம்பந்தப்பட்ட நபர் களுக்கு உடனே சம்மன் அனுப்பி, அவர்களை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்துவதற்கான பணிகளிலும் சிபிசிஐடி அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சிபிசிஐடி போலீ ஸார் கூறும்போது, “சென்னையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் வழக்கமான ஒன்றுதான், ராம ஜெயம் கொலை வழக்கு மட்டுமன்றி சிபிசிஐடி விசாரிக்கும் அனைத்து வழக்குகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது” என்றனர்.