சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் நடிகர் மன்சூர் அலிகான் வீடு உள்ளது. இவரது மகன் துக்ளக் அலிகான்(17). ரம்ஜான் நோன்பை முன்னிட்டு அடையாறில் உள்ள நண்பரின் வீட்டுக்கு சென்றார். அங்கு தொழுகையை முடித்து விட்டு நேற்று அதிகாலை 1 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அடையாறு பாலம் அருகே வந்தபோது பின்னால் வந்த ஒரு கார், மோட்டார் சைக்கிளை இடித்து விட்டு நிற்காமல் சென்றது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த துக்ளக்குக்கு தலை உட்பட பல இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து அடையாறு போக்குவரத்து பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.