முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் மறை வையொட்டி அவரது பிறந்த நாளன்று சிறப்பு அஞ்சல் தலை களை வெளியிட வேண்டுமென்று தென் இந்திய அஞ்சல் தலை சேகரிப் போர் கூட்டமைப்பு வலியுறுத்தி யுள்ளது.
கலாமை கொண்டாடும் வகை யில் அவரது பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண் டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழலில், கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதியன்று, 4 சிறப்பு அஞ்சல் தலைகளை வெளி யிட வேண்டுமென்று தென் இந்திய அஞ்சல் தலை சேகரிப்போர் கூட் டமைப்பு இந்திய அஞ்சல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான பரிந்துரையை தென்னிந்திய அஞ்சல் தலை சேகரிப் போர் கூட்டமைப்பின் பொருளாளர் சி.ஜி.பாஸ்கரன் உள்ளிட்டோர் சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக் சாண்டரிடம் நேற்று அளித்தனர்.
இது தொடர்பாக மெர்வின் அலெக்சாண்டர் கூறியதாவது:
உயர் பொறுப்புகளில் இருப் பவர்கள் இறந்தால் அவர்களது பிறந்த நாள் அல்லது நினைவு நாளன்று சிறப்பு அஞ்சல் தலை வெளியிடுவது வழக்கம். அப்துல் கலாம், ஒரு குடியரசு தலைவர் என்பதை தாண்டி பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் கொண் டாடப்படுகிற ஆளுமை ஆவார்.
அவரது பிறந்த தினத்தில் 4 சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிட தென் இந்திய அஞ்சல் தலை சேகரிப்போர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர் பாக இந்திய அஞ்சல் துறை தலை மைக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அஞ்சல் தலைகளை வெளியிடு வதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.