சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மனைவி ஆகியோரை விடுதலை செய்து திருவண்ணாமலை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியில் உணவுத் துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு. 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.21 லட்சத்து 31 ஆயி ரத்து 820 மதிப்புள்ள சொத்துகள் சேர்த்ததாகக் கூறி எ.வ.வேலு மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதிமன்றம், வழக்கில் இருந்து இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு, நீதிபதி ராஜேந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மேல்முறையீட்டு மனு வுக்கு பதிலளிக்கும்படி எ.வ. வேலு, அவரது மனைவி ஜீவா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி எ.வ.வேலு, அவரது மனைவி ஜீவா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.