தமிழகம்

ஹெல்மெட் அணியாத போலீஸ் இடமாற்றம்

செய்திப்பிரிவு

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடந்த 1-ம் தேதி முதல் கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் சென்னை போக்குவரத்து போலீஸில் பணியாற்றும் 2 போலீஸார் ஹெல்மெட் அணியாமல் சென்றதால், ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றபோது சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சிக்கியதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் மற்றும் விவரங்களை வெளியிட போலீஸார் மறுத்துவிட்டனர்.

SCROLL FOR NEXT