இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவராக நாசே ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு முதல் இளைஞர் காங்கிரஸுக்கு தேர்தல் மூலம் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 2012-ம் ஆண்டு தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக எம்.யுவராஜா, துணைத் தலைவராக விஜய் இளஞ்செழியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கடந்த 2013-ல் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து யுவராஜா நீக்கப்பட்டு, புதிய தலைவராக விஜய் இளஞ்செழியன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், காலியாக இருந்த துணைத் தலைவர் பதவிக்கு இதுவரை பொதுச்செயலாளராக இருந்த நாசே ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள நாசே ராஜேஷ், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.