ஆர்.கே.நகர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக முதல்வர் ஜெயலலிதா இன்று பதவியேற் றுக்கொள்கிறார். பதவியேற்ற பிறகு, கோடநாடு புறப்பட்டுச் செல்கிறார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்த லில் போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதா 1.50 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றார். தேர்தல் முடிவு வெளியான ஜூன் 30-ம் தேதி மாலையே அவர் தலைமைச் செயலகம் வந்து எம்எல்ஏவாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. திடீரென நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
முன்னதாக, கடந்த 29-ம் தேதி தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் சென்னை மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்த முதல்வர் ஜெயலலிதா, அதன் பிறகு, தலைமைச் செயலகம் வரவில்லை.
இந்நிலையில், இன்று காலை தலைமைச் செயலகம் வரும் முதல்வர் ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவாக சட்டப்பேரவை தலைவர் தனபால் முன்னிலையில் 10.45 மணி அளவில் பதவியேற்றுக் கொள்கிறார்.
பின்னர், ஐஎன்எஸ் அடையாறு வளாகத்துக்கு சென்று, அங்கி ருந்து ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. தவிர, சென்னை விமான நிலையத்தில் இருந்து மதியம் கிளம்பும் வகையிலும் பயணத்திட்டம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கோடநாட்டில் முதல்வர் ஜெயல லிதா 10 நாட்கள் வரை ஓய்வெடுப் பார் என்று தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.