நீதிமன்ற உத்தரவை மீறி புதுச்சேரியில் நெடுஞ்சாலைகளில் மதுபானக்கடைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. சாலையோரமே மதுக்கடைகள் இருப்பதால் வாகன ஓட்டிகளில் பலர் எளிதாக மது அருந்துவதாலும் விபத்துகள் நடந்து பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மதுபானக்கடைகள் நெடுஞ் சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவை தாண்டித்தான் அமைய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளது. இதர மாநிலங்களில் இம்முறையை கடைபிடிக்கின்றனர். ஆனால் புதுச் சேரியை பொருத்தவரை நெடுஞ் சாலையோரங்களில் தான் அதிகளவில் மதுபானக்கடைகள் உள்ளன. இதுதொடர்பாக 'தி இந்து' உங்கள் குரலில் பொது மக்கள் பலர் புகார் தெரிவித்தனர்.
மதுபானக்கடைகள் பிரச்சினை கள் தொடர்பாக அவர்கள் கூறும் போது: "புதுச்சேரி கிழக்குக்கடற் கரைசாலை, புதுச்சேரியிலிருந்து விழுப்புரம், கடலூர், திண்டிவனம் செல்லும் நெடுஞ்சாலைகள் ஆகிய வற்றின் இருபுறமும் மதுபானக் கடைகள் இயங்குகின்றன. குறிப் பாக புதுச்சேரி எல்லைப்பகுதி யான காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை பகுதியில்தான் புதுச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி பொறியியல் கல்லூரி ஆகியவை அமைந்துள்ளன.
ஆனால் இப்பகுதியையொட்டி சாலையோரத்திலேயே மதுபானக் கடைகள், சாராயக்கடைகள் அமைந்துள்ளன. இப்பிரச்சி னையை ஆளுங்கட்சி எம்எல்ஏ கல்யாணசுந்தரம் சட்டப்பேரவை யிலேயே எழுப்பினார். மதுக்கடை களால் இப்பகுதியில் அடிக்கடி பிரச்சினைகள் நடக்கின்றன. அத்துடன் சாலை விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. மதுபானக் கடைகள் நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர்தொலைவை தாண்டிதான் அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு இருந்தும் அவை பின்பற்றுவ தில்லை. இதேபோல் தான் விழுப்புரம், கடலூரில் இருந்து புதுச்சேரி வரும் பகுதியிலும் மதுபானக் கடைகள் உள்ளது" என்றனர்.
இதுதொடர்பாக கலால்துறை தரப்பில் விசாரித்தபோது, "புதுச்சேரியில் 95 சாராயக் கடைகள், 71 கள்ளுக்கடைகள், 457 மதுபான கடைகள் உள்ளன. கடந்த 2014-15ம் ஆண்டில் ரூ.540 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ரூ.544.5 கோடி வருவாய் கிடைத்தது. கடந்த பத்து ஆண்டு களில் பத்து மடங்கு வருவாய் அதிகரித்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் அமைந் துள்ள மதுபானக்கடைகளினால் ஏற்படும் இடையூறுகளைகளை வதற்கு கலால்துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணைக் குழுவுடன் இணைந்து ஆய்வு நடத்தப்பட்டது. இப்பகுதியிலி ருந்து மாற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டுமானால் குடி யிருப்பு பகுதிகளில்தான் வைக்க வேண்டும். அங்கு வைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இடப் பற்றாக்குறையால்தான் பழைய முறையிலேயே மதுபானக் கடைகள் தொடர்கிறது. இப்பிரச் சினையை சரி செய்ய விரைவில் மாற்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தனர்.
அரசு வட்டாரங்களில் விசாரித்த போது, "புதுச்சேரி நிலப்பகுதி மிக குறைவானது. புதுச்சேரி கலால் சட்ட விதிகளின்படி ஆய்வுக்கு பின்னரே மது பான விற்பனை உரிமம் தரப்படு கிறது. ஆண்டுதோறும் புதுப்பிக் கிறோம். பிரச்சினை ஏற்படால் சரி செய்ய அரசு முயற்சிக்கும்" என்றனர்.