தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் பெய்து கொண்டிருக்கும் மழை இன்றும் தொடரும். நாளை முதல் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. இந்த மழை 19-ம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று பதிவான மழை நிலவரப்படி நீலகிரி மாவட்டம் தேவலாவில் 5 செ.மீ, கேத்தியில் 3 செ.மீ, கோவை மாவட்டம் வால்பாறை, சின்ன கலார் ஆகிய இடங்களில் 2 செ.மீ, நாகப்பட்டினம் சீர்காழியில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மதுரையில் 40.8 டிகிரி, திருச்சியில் 39.5 டிகிரி, பாளையங்கோட்டையில் 38.6 டிகிரி, சென்னை மற்றும் கரூரில் 37.6 டிகிரி, நாகப்பட்டினத்தில் 37 டிகிரி வெயில் நேற்று பதிவாகியிருந்தது.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.