கோவையில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஷ், இவரது மனைவி சைனா, வீரமணி, கண்ணன், அனூப் ஆகியோர் கைது செய்யப் பட்டனர். கோவை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு ஜூலை 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக் கப்பட்டனர். இவர்களில் சைனா, அனூப், வீரமணி ஆகியோர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி (பொ) சக்திவேல் முன்னி லையில் நேற்று ஆஜர்படுத்தப் பட்டனர்.
பொள்ளாச்சியில் சந்தோஷ் என்பவரை மாவோயிஸ்ட் இயக் கத்தில் சேர்த்துவிட்டதாக தொட ரப்பட்ட வழக்கில் கண்ணனை, ஆழியாறு போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கேரள போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட ரூபேஷ், நேற்று ஆஜர்படுத்தப்படவில்லை.
நீதிமன்றக் காவல் நீட்டிப்பு தொடர்பாக விசாரணை நடந்த போது, கியூ பிரிவு போலீஸார் சார்பில் அரசு வழக்கறிஞர் அகஸ்டஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், குற்றவியல் சட்டம் 311 (ஏ) பிரிவின்கீழ் 5 பேருடைய கையொப்பம் மற் றும் கையெழுத்து ஆகிய வற்றை பெறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
மாவோயிஸ்ட்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலமுரு கன், அரசுத் தரப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் தர வேண்டும் என கேட்டதைத் தொடர்ந்து அந்த மனு மீதான விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர், 3 பேரையும் இந்த வழக்கில் வரும் 8-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.