காங்கிரஸ் தேசியச் செயலாளர் சு.திருநாவுக்கரசரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
முன்னாள் மத்திய இணை அமைச்சரும், காங்கிரஸ் தேசியச் செயலாளருமான திருநாவுக்கரசர் தனது 66-வது பிறந்தநாளை சென்னையில் நேற்று கொண்டாடி னார். தி.நகரில் நடந்த விழாவில், பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் கள் பெற்ற 54 மாணவ, மாணவி களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற் றும் நிர்வாகிகள் பலர் விழாவில் பங்கேற்று வாழ்த்தினர். அப்போது பேசிய இளங்கோவன், ‘‘காங்கி ரஸை விட்டு வெளியே சென்றவர்கள் 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு காணாமல் போய்விடுவர். தேர்தலில் காங்கிரஸ் முக்கிய இடத்தைப் பிடிக்கும்’’ என்றார்.