தமிழகம்

பாரபட்சம் பார்க்காமல் தமிழகத்துக்கு நிதி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரே ஒரு எம்.பி. இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் தமிழகத்துக்கு மத்திய அரசு சம நீதி ஒதுக்கீடு செய்கிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மதுரை, சுசீந்திரத்தில் நேற்று நடைபெற்ற சாலை மேம்பாட்டு திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் நிதின்கட்கரி பேசியதாவது:

இந்தியாவில் 48 லட்சம் கி.மீ. சாலைகள் உள்ளன. இதில் 9600 கி.மீ. தூரம் தேசிய நெடுஞ்சாலையாகும். 40 சதவீத போக்குவரத்து தரை வழிச் சாலை வழியாக நடைபெறு கிறது. இந்த நெரிசல் காரணமாக ஆண்டுக்கு 5 லட்சம் விபத்துகள் நடைபெறுகின்றன. இந்த விபத்து களில் 1.50 லட்சம் பேர் உயிரிழக் கின்றனர். 3 லட்சம் பேர் காயமடை கின்றனர். விபத்துகளைத் தவிர்க்க தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மாற்றப்படு கிறது.

மோடி பிரதமராக பொறுப் பேற்றபோது தினமும் 2 கி.மீ. தூரம் நான்குவழிச் சாலை பணிகள் நடைபெற்றன. இந்த ஒரு ஆண்டில் தினமும் 14 கி.மீ. பணிகள் நடை பெறுகின்றன. அடுத்த ஆண்டில் 30 கி.மீ. தூரப்பணிகள் ஒரு நாளில் நிறைவேற்றப்படும்.

சிமென்ட் சாலைகள் 50 முதல் 60 ஆண்டுகள் வரை அப்படியே இருக்கும். இதனால் சிமென்ட் சாலை அமைக்க 95 லட்சம் டன் சிமென்ட் வாங்கு வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள் ளது. 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படும். ஆயிரம் கோடி ரூபாய் சாலைப்பணி நடைபெறும்போது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். மல்லபுரம்- கொடைக்கானல்- பழநி வரையிலான 81 கி.மீ. தூரச்சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படும்.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க எதினால், பயோகேஸ், பயோடீசலில் வாகனங்களை இயக்க வேண்டும். பேட்டரி மூலம் இயங்கும் வாகனம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த வாகனங்களால் மாசுபடுவது குறைவதுடன் பயணி கள் டிக்கெட் கட்டணம் பாதியாக குறையும்.

சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமான போக்குவரத்து நீர்வழிச்சாலை வழியாக நடைபெறுகிறது. இந்தி யாவில் 3.3. சதவீத போக்குவரத்து தான் நீர்வழிச்சாலையில் நடை பெறுகிறது. நீர்வழிச்சாலையில் ஒரு கி.மீட்டர் தூரத்துக்கு 40 பைசா கட்டணம் வழங்கினால் போதுமானது. எனவே நீர்வழிச் சாலை போக்குவரத்துக்கு முக்கி யத்துவம் வழங்கப்படும்.

நாட்டில் புழக்கத்தில் உள்ள ஓட்டுநர் உரிமங்களில் 30 சதவீதம் போலியானவை. வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சத்தை தவிர்க்க புதிய மோட்டார் வாகனச் சட்டம் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்றார்.

SCROLL FOR NEXT