தமிழகம்

ஹெல்மெட் அணியாமல் செல்லும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை என்ன? - உயர் நீதிமன்றம் கேள்வி

செய்திப்பிரிவு

இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மோட்டார் வாகன விபத்து வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், ஜூலை 1-ம் தேதி முதல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று உத்தரவிட்டார். அதையடுத்து அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாதவர்களிடம் இருந்து அவர்களது ஒரிஜினல் ஆவணங் கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஹெல்மெட் வாங்கிய ரசீதை காண்பித்த பிறகு ஆவணங்கள் திருப்பித் தரப்படுகிறது. இந்நிலை யில் நீதிபதி என். கிருபாகரன் முன்பு இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஹெல்மெட் அணி யாத வழக்கறிஞர் உள்ளிட்டோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், இதுகுறித்து அரசிடம் கேட்டு 13-ம் தேதி தகவல் தெரிவிப்பதாகக் கூறினார்.

SCROLL FOR NEXT