தமிழகம்

கருணைக் கொலை மனு அளித்த சிறுவனுக்கு உயர்தர சிகிச்சை: சென்னை மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

கருணைக் கொலை செய்யக் கோரி மனு அளித்த 17 வயது சிறுவனுக்கு சென்னை பல்நோக்கு உயர் சிறப்பு (மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவ மனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியைச் சேர்ந்த வர் 17 வயது சிறுவன் சக்தி வேல். தொண்டையில் ஏற்பட் டுள்ள புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்புதான் சக்திவேலுக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இளம் வயதில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அரிய வகை புற்றுநோயால் சிறுவன் சக்திவேல் பாதிக்கப்பட்டுள்ளார்.

அறிஞர் அண்ணா புற்றுநோய் சிகிச்சை மையத்தில் கடந்த சில மாதங்களாக சக்திவேல் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நோய் முற்றிய நிலை யில் இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள் ளனர். இதையடுத்து, சென்னை, வேலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க முடியவில்லை.

கடந்த இரண்டு நாட்களாக நோயின் தாக்கம் தீவிரமான நிலை யில், புதன்கிழமை தனது குடும்பத்தினருடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் துக்கு சக்திவேல் சென்றார். ‘‘ஒவ்வொரு நொடியும் மரணத்தை சந்திப்பதால் என்னை கருணைக் கொலை செய்ய உத்தரவிடுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டு, வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னுவிடம் மனு ஒன்றை அளித்தார்.

சிறுவனின் பரிதாபமான நிலை, பொதுமக்களையும்ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வர்களையும் கண்கலங்கச் செய்தது. இந்நிலையில், அந்த சிறுவனுக்கு சென்னையில் உள்ள பல்நோக்கு உயர் சிறப்பு (மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அதன்படி, புதன்கிழமை இரவு 7 மணியளவில் சென்னையில் உள்ள பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிறுவன் சக்திவேல் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து சக்திவேலின் சகோதரர் முத்து கூறுகையில், ‘‘மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத் தலால் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சக்தி வேல் அனுமதிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை (இன்று) முதல் அவனுக்கு குழாய் மூலம் உணவு அளிக்க ஏற்பாடு செய்யப் படும் என டாக்டர்கள் தெரிவித் துள்ளனர்’’ என்றார்.

பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் ரமேஷ் கூறுகை யில், “மருத்துவமனை சிறப்பு வார்டில் சக்திவேல் அனுமதிக்கப் பட்டுள்ளார். 3 பேர் அடங்கிய குழுவினர் சிறுவனை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் ” என்றார்.

SCROLL FOR NEXT