தமிழகம்

கூத்தாண்டவர் கோயிலில் அரவாண் களப்பலி திருநங்கைகள் விதவைக்கோலம்

செய்திப்பிரிவு

உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்துகொண்டனர்.

உளுந்தூர்பேட்டை அருகே கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. கூத்தாண்டவர் எனப்படும் அரவாணை திருநங்கைகள் தங்களது கணவராக ஏற்றுக்கொண்டு கோவிலில் தாலிகட்டிக் கொள்வார்கள். அரவாண் களப்பலிக்கு பின்னர் திருநங்கை கள் அனைவரும் விதவை கோலம் ஏற்பார்கள்.

இந்த ஆண்டு கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சிங்கப்பூர்மலேசியாவிலிருந்தும் திருநங்கை கள் கூவாகத்திற்கு வந்திருந்தனர். முக்கிய நிகழ்ச்சியாக திருநங்கை கள் தாலிகட்டும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை இரவு நடைபெற்றது.

இதற்காக திருநங்கைகள் மணப்பெண் போல பட்டு சேலை அணிந்து தலை நிறைய பூச்சூடி கைகளில் வளையல்கள் அணிந்து அலங்கரித்துக்கொண்டு கூவா கத்திற்கு வந்தனர். கூத்தாண்டவர் கோயில் முன்பு பூசாரியின் கையால் தாலி கட்டிக் கொண்டு தங்களுக்கு திருமணமான மகிழ்ச்சியை கொண்டாடும் வகை யில் இரவு முழுவதும் அவர்கள் ஆடிப்பாடினர்.

இவ்விழாவையொட்டி கோயி லில் உள்ள அரவாணுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமையான நேற்று அதிகாலை அரவாண் சிரசுக்கு மாலை அணி விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அரவாண் சிரசு ஊர்வல மாக எடுத்து வரப்பட்டது. திருநங்கைகள் கூடி நின்று கும்மியடித்து ஆடிப்பாடினார்கள்.

காலை 7 மணிக்கு தேரோட்டத்தை உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரைவடம் பிடித்து இழுத்தனர். தேர்புறப்பட்டவுடன் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த காய்கறி களையும், தானியங்களையும் அரவாண் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து தேர் அழிகளம் நோக்கி புறப்பட்டது. அப்போது திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுதனர். பிற்பகல் 1.30 மணிக்கு அழிகளம் எனப்படும் நத்தம் பகுதிக்கு தேர் சென்றடைந்தது. அங்கு அரவாண் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது

திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த மல்லிகை பூக்களை எறிந்து நெற்றியில் உள்ள குங்கும பொட்டை அழித்து, வளை யல்களை உடைத்து, தாலியை அறுத்தார்கள்.

பின்னர் குளித்து வெள்ளை சேலை அணிந்து விதவை கோலம் பூண்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இன்று (வியாழக்கிழமை)விடையாத்தியும், நாளை மறுநாள் தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

SCROLL FOR NEXT