இணைய வசதிகளை பெறும் வகையில் சேலையூர் இணைப் பகத்துக்கு உட்பட்ட எண்கள் இன்று முதல் அடுத்த தலை முறை நெட்வொர்க் முறைக்கு மாற்றப்படும் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிஎஸ்என்எல் அலுவலகம் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு:
அடுத்த தலைமுறை நெட் வொர்க் என்ற பெயரில் பிஎஸ்என்எல் இணைப்பகங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின் றன. அந்த வகையில் சேலையூர் பிஎஸ்என்எல் இணைப்பகமும் அடுத்த தலைமுறை நெட் வொர்க் முறைக்கு மாற்றப் பட்டுள்ளது. அதன்படி, சேலை யூர் இணைப்பகத்தின் கீழ் உள்ள 22272000 முதல் 22275999 வரையிலான தொலைபேசி எண்கள் இன்று மதியம் 3 மணி முதல் அடுத்த தலைமுறை நெட்வொர்க்குக்கு மாற்றப்படுகின்றன.
இதன்மூலம் லேண்ட்லைன் வாடிக்கையாளர்கள்கூட இணையதளம், இணைய வாய்ஸ் கால், வீடியோ கால் உள்ளிட்ட சேவைகளை பெற முடியும். இந்த மாற்றத்துக்காக கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. எஸ்டிடி மற்றும் ஐஎஸ்டி வசதிகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் 4 டிஜிட் கடவுச்சொல்லை மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அதற்கு 1230000-ஐ டயல் செய்து, 4 டிஜிட் கடவுச்சொல்லை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.