சன் குழும சேனல்கள் மற்றும் எஃப்.எம்-களுக்கு உரிமம் வழங்க மறுத்துள்ளதன் மூலம் ஊடகங் களை நசுக்க மத்திய பாஜக அரசு முயல்வதாக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி:
தனியார் எப்.எம். வானொலிகளுக்கு உரிமம் வழங்குவதற்கான ஒப்பந்தப்புள் ளியில் சன் குழுமத்தின் 5 விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு சான்றி தழ் தராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகியின் ஆலோசனையை மீறி சன் குழு மத்துக்கு அனுமதி மறுக்கப்பட் டுள்ளது.
இது வழக்கத்துக்கு மாறான நடவடிக்கை என முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய தனியார் வானொலிகள் உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் உதய் சாவ்லா மற்றும் பல் வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நிரூபிக்க முடியாத குற்றச் சாட்டுகளின் அடிப்படையில், நாட்டுக்கு எந்த வகையில் பாது காப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை தெளிவாக்க முடியாத நிலையில் சன் குழுமம் போன்ற ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடுமையாகும். எனவே, மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
சன் குழுமத்தின் மீது பொருளாதார வழக்குகள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அதன் மீது நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு வருவதற்கு முன்பே பாதுகாப்பு அனுமதி மறுப்பு என்ற பெயரில் சன் குழும ஊடகங்களை முடக்க முயல்வது கருத்துரிமை மீது நடத்தப்படும் தாக்குதலாகும். இது ஓர் ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துவிடும். எனவே, சன் குழுமத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்:
கடந்த 23 ஆண்டுகளாக செயல் பட்டு வரும் சன் டிவி குழுமத்தின் மீது தேச விரோத குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. இந்நிலையில் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அனுமதி மறுத்துள்ளது. சன் குழுமத்தை முடக்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட யாரும் இதை ஏற்க மாட்டார்கள். கருத்து சுதந்திரத் துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை முறியடிக்க அனைவரும் ஓரணி யில் திரள வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:
மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு, கருத்துரிமையை நசுக்கும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அட்டர்னி ஜென ரல் கருத்துக்கு மாறாக சன் குழு மத்துக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க மத்திய உள்துறை மறுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. சன் டிவிக்குதானே பாதிப்பு என்று அமைதியாக இருந்தால் எதிர்காலத்தில் அனைத்து தரப் பினரையும் அச்சுறுத்தி நசுக்கி விடுவார்கள். எனவே, இந்த சர்வாதிகார போக்கினை முளை யிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத் துறையின் முக்கியத்துவத்தை நாடறியும். ஊடகத் துறை சுதந் திரமாக செயல்படுவதுதான் ஜன நாயகத்தின் அடிப்படையாகும். சன் குழுமத்துக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க மறுத்திருப்பது சந்தேகம் அளிப்பதாக உள்ளது. எனவே, மத்திய அரசு சன் குழுமத்துக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க வேண்டும்.