2016 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து திமுக வியூகம் வகுத்து வருவதாக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி யாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அதிமுக அரசை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 2016 தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராகி வருகிறது. தேர்தல் கூட்டணி குறித்து வியூகம் அமைத்து வருகிறோம்.
தமிழ்நாடு மின்வாரி யத்தில் நடைபெற்ற முறை கேடுகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதி விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் மக்களிடம் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.