தமிழகம்

4 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பவுன் தங்கம் ரூ.18,864-க்கு விற்பனை: நகை கடைகளில் குவியும் மக்கள் கூட்டம்

செய்திப்பிரிவு

கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.18,864 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே சரிவடைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவுக்கு இன்று விலை குறைந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் ரூ.2,385-க்கும் பவுன் ரூ.19,080-க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று காலையில் கிராமுக்கு ரூ.22 குறைந்து ரூ.2,363 ஆகவும் பவுன் ரூ.18,904 ஆகவும் குறைந்தது. மாலையில் இது மேலும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.2,358 ஆகவும் பவுன் ரூ.18,864 ஆகவும் இருந்தது.

அதேபோல சுத்தத் தங்கம் விலை (10 கிராம்) நேற்று ரூ.25,510-க்கு விற்பனையானது. இது இன்று காலையில் ரூ.240 குறைந்து ரூ.25,270 ஆகவும், மாலையில் மேலும் ரூ.50 குறைந்து ரூ.25,220 ஆகவும் இருந்தது.

தங்கத்தின் விலை 4 ஆண்டுகளுக்கு முன் இருந்த விலை அளவுக்கு விற்கப்படுவதால், நகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நுகர்வோர் பலர் அடுத்து வரக்கூடிய சுப நிகழ்ச்சிகளுக்காக தற்போதே நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

SCROLL FOR NEXT