தைராய்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட திமுக எம்.பி. கனிமொழி, சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினார்.
திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி, தைராய்டு பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து கடந்த 16-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி, கடந்த 17-ம் தேதி டாக்டர்கள் குழுவினர் அறுவைச் சிகிச்சை மூலம் கனிமொழி கழுத்தின் பிடரி பக்கத்தில் இருந்த தைராய்டு கிளான்ட்ஸ் கட்டியை அகற்றினர். திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் மருத்துவமனைக்கு சென்று கனிமொழியை சந்தித்து நலம் விசாரித்தனர்.
உடல்நிலை முன்னேற்றம் ஏற் பட்டதைத் தொடர்ந்து நேற்று பகல் 12 மணி அளவில் மருத் துவமனையில் இருந்து கனிமொழி வீடு திரும்பினார்.
மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி, எதிர்வரும் நாடாளு மன்ற கூட்டத்தில் பங்கேற்பாரா என்பது அவரது உடல்நிலை பொறுத்தே இருக்குமென கூறப் படுகிறது.