சென்னை நோக்கி வந்த தனியார் பேருந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
நாகப்பட்டிணத்திலிருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்னை நோக்கி கிழக்கு கடற்கரைச் சாலையில் நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. சூணாம்பேடு அடுத்த கொளத்தூர் கிராமப் பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை யோரத்திலிருந்த ஏரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணித்த சிதம்பரத்தைச் சேர்ந்த தில்ஷாத் பேகம், காரைக்காலை சேர்ந்த சித்ரா, நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த சையத் சுல்தான் பீவி, காரைக் காலைச் சேர்ந்த செம்பையன் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்தி லேயே பலியானார். மேலும், 7 பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்த சூணாம்பேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், விபத்தில் பலியானவர் களின் உடல்களை மீட்டு, மதுராந்தகம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். காய மடைந்தவர்களை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக வழக்கு பதிந்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் முருகன் என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.