தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தேர்தல் சென்னையில் இன்று நடக்கிறது. தலைவர், துணைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவி களுக்கு நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஒரு செயலாளர் பதவிக்கு மட்டும் இன்று தேர்தல் நடக்கிறது.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மொழியைச் சேர்ந்தவர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு கன்னட திரையுலகைச் சேர்ந்த எச்.டி.கங்கராஜ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவர்களாக சங்கையா, மாதேஷ், சாகுல் ஹமீது, முருகன் உள்ளிட்ட வர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர்.
பிலிம் சேம்பரில்..
இரண்டு பேர் கொண்ட செய லாளர்கள் பதவிக்கு டி.ஏ.அருள் பதி போட்டியின்றி தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். மற்றொரு செயலாளர் பதவிக்கு சீனிவாசன் சுந்தர் என்ற முக்தா சுந்தரை எதிர்த்து காட்ரகட்ட பிரசாத் போட்டியிடுகிறார். இந்த செய லாளர் பதவிக்கான தேர்தல் இன்று சென்னை பிலிம் சேம்பர் கட்டிடத்தில் நடக்கிறது.
தேர்தல் முடிந்த பிறகு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.