இளைஞர்கள் வேலைவாய்ப்பு பயிற்சிக்கான நேர்முகத் தேர்வு வரும் ஜூலை 25-ம் தேதி சென்னை அண்ணா சாலையிலுள்ள பிரிட் டிஷ் கவுன்சிலில் நடைபெறுகிறது.
ரின் சோப்பு நிறுவனத்தின் வர்த்தக சமூகப் பொறுப்புத் திட்ட (CSR) அங்கமான ரின் கேரீர் ரெடி அகாடமி மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இணைந்து இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கான திறன்களை ஊக்குவிப்பதற் குப் பயிற்சிகளை வழங்கவுள்ளது.
இப்பயிற்சி மற்றும் சான்றிதழை வழங்குவதுடன், பாடத் திட்டங்கள் வடிவமைப்பையும், பகுப்பாய்வையும் பிரிட்டிஷ் கவுன்சில் செய்ய உள்ளது.
இது குறித்து தென்னிந்தியாவுக் கான பிரிட்டிஷ் கவுன்சில் இயக்கு நர் மெய்-க்வி பார்கார் கூறியதாவது:
“ரின் கேரீர் ரெடி அகாடமிக் காக பிரிட்டிஷ் கவுன்சில் வழங்க விருக்கும் பயிற்சி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடிவில் வேலைவாய்ப்புக்குத் தேவையான வகையில் ஆங்கிலம் பேசும் திறனை வளர்த்தல், ஆடை அணிதல், நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் விதம் ஆகியவை பற்றி ஒவ்வொரு நபர் மீதும் சிறப்புக் கவனம் செலுத்திப் பயிற்சி தரப்படும்” என்றார்.
ஆகஸ்ட் மாதம் நடை பெறவிருக்கும் 3 வார நேரடிப் பயிற்சிக்குத் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதற்கான நேர்முகத் தேர்வு வரும் ஜூலை 25 சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரிட் டிஷ் கவுன்சில் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலும், விவரங்களுக்கு www.britishcouncil.in/rin-career-ready என்ற இணைய தளத்தைப் பார்க்கலாம்.